காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை சுட்டு கொன்ற மகள்

உத்தரபிரதேச மாநிலத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை அவரது மகளே காதலருடன் இணைந்து சுட்டுக்கொன்றுள்ளார். #MuzaffarnagarFatherDead
முஷாஃபர் நகர்,
உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை அவரது மகளே காதலருடன் இணைந்து சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து வட்ட அதிகாரி அசோக் குமார் கூறுகையில், ”உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் ரோகேலா. டெல்லியில் வேலை செய்து வரும் ராகேஷிற்கு காவ்யா (23) என்னும் மகள் உள்ளார். இந்நிலையில் காவ்யா, சமீர் அகமத் என்னும் இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் ராகேஷிற்கு தெரியவே, அவர் தனது மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து ராகேஷை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
அதன்படி, வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராகேஷ் ரோகேலாவை, அவரது மகள் காவ்யா மற்றும் காதலர் சமீர் அகமத் இணைந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராகேஷின் மகள் காவ்யா, காதலர் சமீர் அகமத் மற்றும் கொலைக்கு உதவியாய் இருந்த சமீரின் நண்பர் ஷதாப் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” எனக் கூறினார்.
Related Tags :
Next Story