வங்கி மோசடிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க ஆர்.பி.ஐ. கவர்னருக்கு பாராளுமன்ற குழு அழைப்பு


வங்கி மோசடிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க ஆர்.பி.ஐ. கவர்னருக்கு பாராளுமன்ற குழு அழைப்பு
x
தினத்தந்தி 17 April 2018 9:17 AM GMT (Updated: 17 April 2018 9:17 AM GMT)

வங்கி மோசடிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க ஆர்.பி.ஐ. கவர்னருக்கு பாராளுமன்ற குழு அழைப்பு விடுத்து உள்ளது. #ParliamentaryPanel #RBI #BankScams

புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு மேல் பிரபல வைர வியாபாரிகள் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்‌ஷி மோசடியில் ஈடுபட்டது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்று பிற வங்கியிலும் தொழில் அதிபர்கள் மோசடியில் ஈடுபட்ட தகவல்கள் வெளியாகியது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. வங்கிகளின் ஆண்டு தணிக்கை அறிக்கையானது ஆர்.பி.ஐ.யிடம் சமர்பிக்கப்படுகிறது. வங்கிகளின் கண்காணிப்பகமாக இருக்கும் ஆர்.பி.ஐ.யிடம் மோசடி தொடர்பாக சந்தேகம் எழாதது தொடர்பாகவும் விமர்சிக்கப்படுகிறது. இம்மோசடிகள் தொடர்பாக வங்கி அதிகாரிகள் கைது மற்றும் விசாரணை தொடர்கிறது. இந்நிலையில், வங்கி மோசடிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு ஆர்.பி.ஐ. கவர்னர் உர்ஜித் படேலுக்கு பாராளுமன்ற குழு அழைப்பு விடுத்து உள்ளது. 17-ம் தேதி ஆஜராக கேட்டுக்கொண்டு உள்ளது.

Next Story