ஆலமரத்திற்கு நோயாளிகளுக்கு ஏற்றப்படுவது போல குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளிக்கும் வினோதம்


ஆலமரத்திற்கு நோயாளிகளுக்கு ஏற்றப்படுவது போல குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளிக்கும் வினோதம்
x
தினத்தந்தி 18 April 2018 7:32 PM GMT (Updated: 18 April 2018 7:32 PM GMT)

தெலுங்கானாவில் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுவது போல் மருந்துகள் ஏற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #BanyanTree

ஐதராபாத்,

700 ஆண்டுகள் பழமையான ஆலமரம் 

தெலுங்கானா மாநிலம் மெகபூப்நகர் மாவட்டத்தில் உள்ளது 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த ஆலமரம் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த ஆலமரத்தின் கிளை ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன் பூச்சிகளால் அரிக்கப்பட்டது. இதனால் அந்த ஆலமரம் பட்டுபோகும் நிலைக்கு வந்தது. 

குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த மரத்தை பார்வையிட்ட ஆட்சியர், சம்பந்தபட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து நோயாளிகளுக்கு செலுத்தப்படுவது போன்று இந்த ஆலமரத்திற்கு பூச்சிகளை அழிப்பதற்கு தேவையான மருந்துகள் ஏற்றப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் வியப்பு

இதனை பார்வையிட்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடன் நின்று பார்த்துவிட்டு செல்கின்றனர். சிலர் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். 

ஆலமரத்திற்கு நோயாளிகளுக்கு குளுக்கோஸ்  ஏற்றப்படுவது போல் மருந்துகள் ஏற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றது. 

Next Story