காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் இறந்தார்.
பாட்டியாலா,
பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் விடுதலை படை அமைப்பை நிறுவியவர் ஹர்மந்தர் சிங் மிண்டோ. இவர் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 2014-ம் ஆண்டு மலேஷியாவில் இருந்து இந்தியா திரும்பும் போது டெல்லி விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் பஞ்சாpபில் உள்ள நாபாஹ் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது பஞ்சாப் பாடியாலா சிறையில் இருந்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து ஜெயில் அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். டாக்டருடன் விரைந்து வந்த அவர்கள் ஹர்மந்தர் சிங் மிண்டோவை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்தநிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4 மணி அளவில் மரணமடைந்தார்.
அவரது மரணத்தை தொடர்ந்து பஞ்சாப்பில் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story