நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனு தள்ளுபடி


நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 19 April 2018 5:28 AM GMT (Updated: 19 April 2018 5:35 AM GMT)

நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.. #SupremeCourt #JudgeLoya

புதுடெல்லி,
மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ணன் லோயா (48), கடந்த 2014 டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் சக நீதிபதியின் குடும்ப திருமண விழாவுக்கு சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் குஜராத்தின் சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வந்தார். 

இந்த வழக்கில் தற்போ தைய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். லோயா மரணத்துக்குப் பிறகு பொறுப்பேற்ற நீதிபதி, வழக்கில் இருந்து அமித் ஷா வை விடுவித்து உத்தரவிட்டார்.

“நீதிபதி லோயா மரணம் இயற்கையானது அல்ல” என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் பொது நல  வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.  

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் இயற்கையானதே; சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரிய மனு நீதிமன்றத்தை களங்கப்படுத்தும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதி லோயா மரணம் தொடர்பாக தற்போது நடைபெற்றுவரும் விசாரணையே போதுமானது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. 

Next Story