தகுதி நீக்க தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? : சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை கேட்க துணை ஜனாதிபதி முடிவு


தகுதி நீக்க தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? : சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை கேட்க துணை ஜனாதிபதி முடிவு
x
தினத்தந்தி 21 April 2018 6:26 AM GMT (Updated: 21 April 2018 7:37 AM GMT)

தகுதி நீக்க தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை கேட்க துணை ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.#VenkaiahNaidu #CJI

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா, விசாரணைக்காக வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக இவர் மீது செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய 4 மூத்த நீதிபதிகள் கடந்த ஜனவரி மாதம் குற்றம்சாட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து, தீபக் மிஸ்ரா மீது மேற்கண்ட குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு புகார் களை கூறிய எதிர்க்கட்சிகள் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் அது கைகூடவில்லை. என்றாலும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக கடந்த மாதம் முதல் எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவிடம் தீபக் மிஸ்ராவை தலைமை நீதிபதி பதவியில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டுவர அனுமதி வழங்கக்கோரி நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

.அந்த நோட்டீசில் நாடாளுமன்ற மாநிலங்களவையைச் சேர்ந்த 71 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு உள்ளனர். துணை ஜனாதிபதி இந்த நோட்டீஸ் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர அனுமதி அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்து அறிவிப்பார்.

Next Story