சூரத்தில் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமி தாயுடன் ரூ.35 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டவர்

சூரத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி, தாயுடன் ரூ.35 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டவர்கள் இதில் முக்கிய குற்றவாளி கைது செய்யபட்டார்.
சூரத்,
குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 11 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டார். அவரது உடல் சிதைந்த நிலையில் மிகவும் கோரமாக்கப்பட்டு இருந்தது. குஜராத் மாநிலம் சூரத்தில் பெஸ்டன் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானம் அருகே முட்புதருக்குள் ஒரு சிறுமி பிணமாக கிடந்தார்.
சிறுமியின் உடலில் 87 இடங்களில் காயம் இருந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மாநில குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் ஹர்ஷாயி குர்ஜார் (வயது 25). ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் பகுதியைச் சேர்ந்தவர். மேலும் அவரது சகோதரர் ஹரீஷ், நரேஷ், அமரிஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கற்பழிக்கப்பட்ட சிறுமியையும், அவரது விதவை தாயையும் ரூ.35 ஆயிரம் கொடுத்து ஹர்ஷாயி ஒருவரிடம் வாங்கி இருந்தது தெரிய வந்தது. இந்த இருவரையும் ஹர்ஷாய் ரூ.35 ஆயிரத்துக்கு வாங்கி ராஜஸ்தானில் இருந்து சூரத்துக்கு அடிமை தொழிலாளிகளாக கொண்டு வந்துள்ளார். முதலில் அவர் தாயை, பல முறை கற்பழித்து உள்ளார். பின்னர் 11 வயது சிறுமியை கற்பழித்து கொன்றுள்ளார். போலீஸ் விசாரணையில் இந்த தகவல்கள் தெரியவந்தது.
Related Tags :
Next Story