மேற்கு வங்காளத்தில் 40 வெடிகுண்டுகள் பறிமுதல்

மேற்கு வங்காள மாநிலம் சந்த்ரபூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். #HowrahBombs
ஹவுரா,
மேற்கு வங்காள மாநிலம் சந்த்ரபூர் பகுதியின் அம்டா நிலைய போலீசாருக்கு அங்குள்ள கைவிடப்பட்ட ஒரு வீட்டில் வெடிகுண்டுகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில் அப்பகுதியிலுள்ள வீட்டை சோதனையிட்ட போலீசார், அங்கு 40க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை உறுதி செய்தனர். உடனடியாக கொல்கத்தாவிலுள்ள வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிபுணர்கள் விரைந்து வந்து வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர். மேலும் வீட்டின் முன் இருந்த இரண்டு பைக்குகளையும் போலீசார் கைப்பற்றினர்.
இதனிடையே வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து அம்டா பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story