ஆந்திராவில் விநோதம்: 13 வயது சிறுவனை காதல் திருமணம் செய்த 23 வயது பெண், போலீசுக்கு பயந்து மணமக்கள் பெற்றோருடன் மாயம்


ஆந்திராவில் விநோதம்: 13 வயது சிறுவனை காதல் திருமணம் செய்த 23 வயது பெண், போலீசுக்கு பயந்து மணமக்கள் பெற்றோருடன் மாயம்
x
தினத்தந்தி 12 May 2018 11:30 PM GMT (Updated: 12 May 2018 7:54 PM GMT)

ஆந்திராவில் 13 வயது சிறுவனை 23 வயது பெண் காதல் திருமணம் செய்துள்ளார். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த திருமணத்தால் போலீசுக்கு பயந்து மணமக்கள் பெற்றோருடன் மாயமாகியுள்ளனர்.

திருமலை, 

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கவுதாலம் அருகே உள்ள உப்பரஹால் கிராமத்தை சேர்ந்தவன் 13 வயது சிறுவன். கர்நாடக மாநிலம் சனிக்கனூரை சேர்ந்த அய்யம்மாள்(23) என்பவர் சிறுவனின் உறவினர் ஆவார். இதனால் இருவரும் ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்று வந்து உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வயது வித்தியாசம் இல்லாமல் காதல் மலர்ந்தது.

மைனரான சிறுவனுக்கும், மேஜர் பெண்ணுக்கும் ஏற்பட்ட இந்த காதல் உறவு பெற்றோர்களுக்கு தெரியவந்தது. பெற்றோர்கள் இந்த விநோத காதலுக்கு பச்சைக்கொடி காட்டி சிறுவனுக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி உப்பரஹால் கிராமத்தில் திருமணத்தை நடத்தினார்கள்.

இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மைனர் பையனுக்கு 23 வயது பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருமணத்தை செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இதை அறிந்ததும் மணமக்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போது போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டனர்.

Next Story