டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் பிடிபட்ட வெளிநாட்டு பயணி


டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் பிடிபட்ட வெளிநாட்டு பயணி
x
தினத்தந்தி 14 May 2018 5:30 AM IST (Updated: 14 May 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்த கனடாவைச் சேர்ந்த வெளிநாட்டுப்பயணியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி, 

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனாவின் காங்கோ என்ற நகருக்கு நேற்று முன்தினம் இரவு விமானம் ஒன்று புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணிப்பதற்காக வந்த கனடாவை சேர்ந்த 60 வயது நபரின் உடைமைகளை போலீசார் ஸ்கேனர் கருவியில் வைத்து சோதித்தனர். அப்போது அந்த பயணியின் பையில் 5 துப்பாக்கி குண்டுகள் இருந்ததை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
1 More update

Next Story