கர்நாடக சட்டசபை தேர்தலில் 72.13 சதவீத வாக்குப் பதிவு

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் நடந்த சட்டசபை தேர்தலில் 72.13 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 72.13 சதவீத வாக்குகள் பதிவாயின.
இதில் அதிகபட்சமாக பெங்களூருவின் கோஸ்கோட் தொகுதியில் 89.97 சதவீத வாக்குகளும், கோலாரில் உள்ள சினிவாசபூர் தொகுதியில் 88.40 வாக்குகளும் பதிவாயின.
குறைந்தபட்சமாக தாசரஹள்ளி தொகுதியில் 48.03 சதவீத வாக்குகளும் சி.வி. ராமன் நகர் தொகுதியில் 48.98 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.
தேர்தல் நடந்த 222 தொகுதிகளில் 71 தொகுதிகளில் 80 சதவீத வாக்குகளும், 80 தொகுதிகளில் 70 சதவீத வாக்குகளும் பதிவாயின. எஞ்சிய அனைத்து தொகுதிகளிலும் குறைவான அளவிலேயே வாக்குகள் பதிவாயின.
குறிப்பாக பெங்களூரு உள்ளிட்ட நகர்ப்புற தொகுதிகளில் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றுவதில் அதிக ஆர்வம் காட்டாததால் அந்த தொகுதிகளில் 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாயின.
கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் கூறுகையில், கடந்த 1952-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு பிறகு இந்த தேர்தலில்தான் அதிக சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story