பந்தியில் இடம் கிடைக்காததால் லாலு பிரசாத் திருமண வீட்டில் ரகளை

பந்தியில் இடம் கிடைக்காததால் லாலு பிரசாத் மகனின் திருமண நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாட்னா,
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் கால்நடை தீவன ஊழல் வழக்கில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், கட்சி எம்.எல்.ஏ. சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் பாட்னா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இதற்காக லாலு பிரசாத் பரோலில் வந்திருந்தார். பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
திருமண மண்டபத்தில் லாலுவின் உறவினர்கள், அரசியல் கட்சியினர் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். விருந்து நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களுக்காக தனி பந்தல் போடப்பட்டு இருந்தது. அங்கும் ஏராளமான கூட்டம் கூடியது. கூட்டத்தினர் பந்திக்கு முந்திச்செல்வதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இடம் கிடைக்காத கட்சியினர் சிலர் மேஜை, நாற்காலிகளை உடைத்தனர். சிலர் பரிமாற வைத்திருந்த உணவு பொருட்களை அள்ளிச்சென்றனர்.
Related Tags :
Next Story