ஆந்திர மாநில பா.ஜனதா தலைவராக லட்சுமி நாராயணா நியமனம்: அமித்ஷா அறிவிப்பு

ஆந்திர மாநில பா.ஜனதா தலைவராக லட்சுமி நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஆந்திர மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவராக இருந்த சோமு வீரராஜூவுக்கு பதிலாக புதிய தலைவராக கண்ணா லட்சுமிநாராயணா நியமிக்கப்பட்டு உள்ளார். இதேப்போன்று காஷ்மீர் மாநில பாரதீய ஜனதா தலைவராக இருந்த சத் ஷர்மா மந்திரியானதால் அவருக்கு பதிலாக புதிய தலைவராக ரெய்னா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த இரு நியமன அறிவிப்புகளையும் பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளார். ஆந்திர மாநிலத்தில் புதிய கட்சி தலைவர் நியமனத்துக்கு பாரதீய ஜனதா கட்சியினரிடையே எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story