பெட்ரோல், டீசல் விலை 2-வது நாளாக உயர்வு, டீசல் விலை புதிய உச்சம்


பெட்ரோல், டீசல்  விலை 2-வது நாளாக உயர்வு, டீசல் விலை புதிய உச்சம்
x
தினத்தந்தி 15 May 2018 1:31 AM GMT (Updated: 15 May 2018 1:34 AM GMT)

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை 2 ஆம் நாளாக உயர்ந்துள்ளது. #PetrolPrice #DieselPrice


புதுடெல்லி, 

சர்வதேச சந்தையில் நிலவும் எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் விலையை தினசரி அடிப்படையில் உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்தது.

ஆனாலும் கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 20 நாட்களாக உயர்த்தவில்லை. கடந்த மாதம்  24–ந்தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த 12–ந்தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்த சூட்டோடு சூடாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மீண்டும் கடுமையாக உயர்த்தின.

இந்த நிலையில், 2 ஆம் நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 16 காசு உயர்ந்து ரூ.77.77 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 23 காசு உயர்ந்து ரூ.70.02 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு  உயர்ந்துள்ளது. 

Next Story