தேசிய செய்திகள்

‘யூ டு கர்நாடகா?’ உமர் அப்துல்லா ‘டுவிட்’ + "||" + Et tu Karnataka says Omar Abdullah as poll results come in

‘யூ டு கர்நாடகா?’ உமர் அப்துல்லா ‘டுவிட்’

‘யூ டு கர்நாடகா?’ உமர் அப்துல்லா ‘டுவிட்’
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் உமர் அப்துல்லா ‘யூ டு கர்நாடகா’ என டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். #OmarAbdullah
ஸ்ரீநகர்,

கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது, பா.ஜனதா அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. பாரதீய ஜனதா தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைக்கும் வகையில்  பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும், 105 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவு தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய டுவிட்டரில் தகவல்களை பதிவு செய்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்தும் டுவிட்டரில் கருத்து பதிவிடப்பட்டு வருகிறது.

கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, ஜீலியஸ் சீசர் கதையில் இடம்பெறும் முக்கியமான வசனத்தை பயன்படுத்தி உள்ளார். “யூ டூ ப்ரூட்டஸ்? என கேள்வியை எழுப்பும் சீசர், அவருடைய எதிரிகளின் தாக்குதலை தடுக்காமல் இறந்து போனார் என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல். ஆலோசனை மண்டபத்தில் சீசர் அவருடைய நண்பர் மார்கஸ் ப்ரூட்டஸ் மற்றும் பிற சதிவாதிகளால் கொல்லப்படுவார். தூரோகத்தை சுட்டிக்காட்டும் போது “யூ டூ ப்ரூட்டஸ்?” என கேட்பது வழக்கமாக உள்ளது.

 இப்போது இதனை குறிப்பிட்டு உமர் அப்துல்லா டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், "Et tu #Karnataka" நீயுமா கர்நாடகா? என கேள்வியை எழுப்பி உள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. நவாஸ் ஷெரீப்புடன் மோடியை இணைத்து கூறுவதா? காங்கிரஸ் கருத்துக்கு உமர் அப்துல்லா கண்டனம்
நவாஸ் ஷெரீப்புடன் மோடியை இணைத்து டுவிட்டரில் பதிவிட்டு இருந்த காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கு உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்து உள்ளார்.
2. ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்: உமர் அப்துல்லா
ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். #MehboobaMufti #PDP #BJP
3. கர்நாடகத்தில் உள்ள சந்தர்ப்பவாத கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் எடியூரப்பா பேச்சு
கர்நாடகத்தில் நடைபெற்று வரும் சந்தர்ப்பவாத கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் என எடியூரப்பா கூறினார்.
4. கர்நாடக புதிய முதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார், சோனியா, மம்தா உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்பு
கர்நாடக மாநில புதிய முதல்-மந்திரியாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி பதவி ஏற்றுக் கொண்டார். #HDKumaraswamy #Karnataka
5. காங்கிரஸ் - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி மக்கள் தீர்ப்புக்கு எதிரானது அமித்ஷா பேட்டி
கர்நாடகாவில் அமைந்து உள்ள காங்கிரஸ் - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என அமித்ஷா கூறிஉள்ளார். #AmitShah #BJP #Congress