வாரணாசி ரெயில் நிலையத்தில் கட்டுமான பணி நடந்து வந்த மேம்பாலம் இடிந்தது, 12 பேர் உயிரிழப்பு

வாரணாசி ரெயில் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடந்துவந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது. #Varanasi
வாரணாசி,
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடந்துவந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து நேரிட்டு உள்ளது. விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று உள்ளது. அங்கு மீட்பு படையினர், ஆம்புலன்ஸ்கள் விரைந்து உள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே 12 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story