மோடியின் தலைமையின் 2022-ம் ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம் - அமித் ஷா பேச்சு


மோடியின் தலைமையின் 2022-ம் ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம் - அமித் ஷா பேச்சு
x
தினத்தந்தி 15 May 2018 3:05 PM GMT (Updated: 15 May 2018 3:05 PM GMT)

மோடியின் தலைமையின் 2022-ம் ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம் என அமித் ஷா பேசி உள்ளார். #AmitShah

புதுடெல்லி,

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. டெல்லியில் மாலை 7 மணியளவில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடியை பா.ஜனதா தலைவர் அமித் ஷா வரவேற்றார். பின்னர் அங்கு பேசுகையில், இது பாரதீய ஜனதாவின் 15வது வெற்றியாகும், பாரதீய ஜனதா 14 தேர்தல்களில் இதுவரையில் வெற்றி பெற்று உள்ளது. பாரதீய ஜனதா 15-வது தேர்தலிலும் வெற்றியை தனதாக்கி உள்ளது. பாரதீய ஜனதா மோடியின் தலைமையில் 2019-ல் மட்டும் கிடையாது, 2022-ம் ஆண்டும் மத்தியில் ஆட்சியை அமைக்கும், புதிய இந்தியாவை உருவாக்கும் என பேசிஉள்ளார். கர்நாடக சட்டசபையில் பெற்ற வெற்றியானது சாதாரணமானது கிடையாது எனவும் குறிப்பிட்டார். 

Next Story