வாரணாசியில் மேம்பாலம் இடிந்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு; 50 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்


வாரணாசியில் மேம்பாலம் இடிந்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு; 50 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
x
தினத்தந்தி 15 May 2018 3:47 PM GMT (Updated: 15 May 2018 3:47 PM GMT)

வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது. #Varanasi #FlyoverCollapses



வாரணாசி,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடந்துவந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. விபத்து நேரிட்டது தொடர்பாக தகவல் தெரியவந்ததும் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். ஆம்புலன்ஸ்கள் விரைந்தது. மீட்பு படையினர் பொதுமக்கள் இணைந்து விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கி 12 பேர் உயிரிழந்து உள்ளனர் என முதல்கட்ட  தகவல்கள் வெளியாகியது.

விபத்து நேரிட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரையில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர், சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளது என மீட்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே பாலம் இடிந்து விழுந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் 50-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யந்தாத் வருத்தம் தெரிவித்து உள்ளார். துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மயூரியா விபத்து நேரிட்ட பகுதிக்கு விரைந்து உள்ளார். தேவையான உதவிகளை செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். 

பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்ட சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஜியிடம் பேசினேன். உத்தரபிரதேச மாநில அரசு தொடரந்து நிலையை கண்காணிப்பதாக தெரிவித்தார், தேவையான உதவிகளை செய்யவும் அரசு பணியாற்றி வருவதாக தெரிவித்தார் என குறிப்பிட்டு உள்ளார். பிரதமர் மோடியும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் தங்களுடைய  கவலையை தெரிவித்து உள்ளார்கள். 

Next Story