தேர்தலில் அமோக வெற்றி கர்நாடக மக்களுக்கு மோடி நன்றி

தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு கர்நாடக மக்களுக்கு மோடி நன்றி தெரிவித்தார். #NarendraModi
புதுடெல்லி,
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. எனினும் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.
இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நேற்று குறிப்பிட்டு உள்ளதாவது:–
பா.ஜனதாவின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு வாக்களித்த கர்நாடக மாநில சகோதர, சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் நேரம், காலம் பார்க்காமல் கட்சியின் வெற்றிக்கு கடுமையாக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்களால் தனி பெரும் கட்சியாக அதிக இடங்களை பா.ஜனதா பெற்றுள்ளது. இதற்காக அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story