மாணவர்கள் வருகை பதிவில் கட்டாயமாக ’ஜெய்ஹிந்த்’ கூற வேண்டும்: மத்தியபிரதேச அரசாங்க உத்தரவால் சர்ச்சை


மாணவர்கள் வருகை பதிவில் கட்டாயமாக ’ஜெய்ஹிந்த்’ கூற வேண்டும்: மத்தியபிரதேச அரசாங்க உத்தரவால் சர்ச்சை
x
தினத்தந்தி 16 May 2018 4:37 AM GMT (Updated: 16 May 2018 4:37 AM GMT)

பள்ளி மாணவர்கள் வருகை பதிவின்போது கட்டாயமாக ‘ஜெய்ஹிந்த்’ என்று கூற வேண்டும் என மத்தியபிரதேச அரசாங்க உத்தரவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. #JaiHindMadhyaPradesh

போபால்,

மாணவர்கள் வருகை பதிவேட்டின் போது கட்டாயமாக ’ஜெய்ஹிந்த்’ என்றே கூற வேண்டும் என மத்திய பிரதேச அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் மத்தியபிரதேச பள்ளிகளில் வருகைப் பதிவு எடுக்கும்போது மாணவர்கள் ‘உள்ளேன் ஐயா’ என்று கூறுவதற்கு பதிலாக ‘ஜெய்ஹிந்த்’ என்றே கூற வேண்டும். பள்ளி மாணவர்களிடையே தேசப்பற்றை உருவாக்க இம்முடிவு எடுத்துள்ளதாக மத்தியபிரதேச பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விஜய் ஷா கூறியிருந்தார். இந்நிலையில் மாணவர்கள் ஜெய்ஹிந்த் என்று கூறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்தியபிரதேச அரசாங்கம் தற்போது உத்தரவிட்டுள்ளது. 

இதனிடையே மத்தியபிரதேசத்திலுள்ள 1.22 லட்ச அரசாங்க பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இது சம்பந்தமாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஆலோசனை வழங்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் விஜய் ஷா கூறினார். 

Next Story