தேசிய செய்திகள்

ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் பத்திரமாக மீட்பு + "||" + Andhra boat capsize: 17 people had been rescued so far, while others are still missing

ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் பத்திரமாக மீட்பு

ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் பத்திரமாக மீட்பு
ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
நகரி,

கோதாவரி ஆற்றில் தேவிபட்டினத்தில் இருந்து மாடப்பள்ளி செல்லும் ஒரு படகில் போலாவரம் பகுதியை சேர்ந்த ஆதிவாசிகள் 40 பேர் பயணம் செய்தனர். அப்போது சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது. இதனால் அந்த படகு தள்ளாடியது.

ஏற்கனவே தீ விபத்து நடந்த பகுதியில் அந்த படகு திடீரென கவிழ்ந்தது. அப்போது படகில் இருந்த 7 ஆண்கள் மட்டும் கரைக்கு நீந்தி வந்தனர். படகில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 33 பேரின் நிலை என்ன ஆனது? என்று தெரியவில்லை.

இந்தநிலையில்,  22 படகுகளில் மீட்பு படையினர் சென்று மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்னர்.  தற்போது வரை 17 பேர் பத்திரமாக மீட்கபட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.