பிரச்சினைகளை காங்கிரசுடன் இணைந்து எதிர்கொள்வோம்-குமாரசாமி


பிரச்சினைகளை காங்கிரசுடன் இணைந்து எதிர்கொள்வோம்-குமாரசாமி
x
தினத்தந்தி 17 May 2018 11:41 AM IST (Updated: 17 May 2018 11:41 AM IST)
t-max-icont-min-icon

பிரச்சினைகளை காங்கிரசுடன் இணைந்து எதிர்கொள்வோம். ஆளுநர் மாளிகைக்கு பேரணியாகச் செல்வோம் என குமாரசாமி கூறி உள்ளார். #KarnatakaCMRace

பெங்களூர்

எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் நடக்கும் தர்ணா போராட்டத்தில் தேவகவுடா, குமாரசாமி ஆகியோர் பங்கேற்று உள்ளனர். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களும் பங்கேற்று உள்ளனர்.

மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் நலனை பாதுகாக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும். பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் ஏன் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? .காங். மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக மற்றும் அமைச்சர்கள் பணியாற்றுகிறார்கள். தற்போது  எம்எல்ஏக்களை பாதுகாப்பதுதான் எங்கள் திட்டம்.

அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளைப் பயன்படுத்தி எம்.எல்.ஏக்களை மிரட்டுவது பாஜகவின் வாடிக்கை 
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது 

காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது. பிரச்சினைகளை காங்கிரசுடன் இணைந்து எதிர்கொள்வோம் 

சட்டப்பேரவையிலிருந்து , ஆளுநர் மாளிகைக்கு பேரணியாகச் செல்வோம். என கூறினார்.
1 More update

Next Story