மனைவியின் படுக்கை அறையில் ரகசியமாக கேமிரா பொருத்திய கணவன்


மனைவியின் படுக்கை அறையில் ரகசியமாக கேமிரா பொருத்திய கணவன்
x
தினத்தந்தி 17 May 2018 3:55 PM IST (Updated: 17 May 2018 3:55 PM IST)
t-max-icont-min-icon

மனைவியின் படுக்கை அறையில் ரகசியமாக கேமிரா பொருத்திய கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 மும்பை

மகாராஷ்டிரா மாநிலத்தில்  தீபக்- ரம்யா தம்பதியினருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். 

வெளிநாட்டில் பத்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த தீபக், கடந்த 8 மாதங்களுக்கு முன்னர்தான் இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில், 8 மாதங்கள் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்த இவர், கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

தனது மகனை பார்க்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ரம்யாவின் வீட்டுக்கு வருவார். அப்போது, தனது மனைவியின் மீது தீபக்கிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது, இதனால், மனைவியின் படுக்கை அறையில் இருந்த நீர் தூய்மைப்படுத்தும் இயந்திரத்தில் உளவு கேமிரா ஒன்றை ரகசியமாக வைத்துள்ளார். இந்த கேமிராவை கண்டுபிடித்த மனைவி இதுகுறித்து போலீசில் புகார் அளித்ததையடுத்து, கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 More update

Next Story