கர்நாடகா: ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் 11-ல் வாக்குப்பதிவு


கர்நாடகா: ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் 11-ல் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 May 2018 12:25 PM GMT (Updated: 17 May 2018 12:25 PM GMT)

கர்நாடகா ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் 11-ல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்தநிலையில்  பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக த எம்.எல்.ஏ. விஜயகுமார் அறிவிக்கப்பட்டிருந்தார். 

இவருடைய வயது 70. அவர் நேற்று முன்தினம் தீவிர பிரசாரம் மேற்கொண்டு இருந்த போது  திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

 பா.ஜனதா அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி என்பதால், ஜெயநகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. பாஜக வேட்பாளர் விஜயகுமார் உயிரிழந்ததால், மே 12-ம் தேதி ஜெயநகரில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. 

இந்தநிலையில்  ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் 11-ல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று ஜூன் 16-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story