இன்றுடன் ஓய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரர்


இன்றுடன் ஓய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரர்
x
தினத்தந்தி 18 May 2018 10:47 AM IST (Updated: 18 May 2018 10:47 AM IST)
t-max-icont-min-icon

உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரர் இன்றுடன் ஓய்வு பெற உள்ளார். #JusticeChelameswar

புதுடெல்லி, 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில்  செல்லமேஸ்வர் உள்ளார்.  அவர் கடந்த காலங்களில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் பணியாற்றுவதை தவிர்த்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அமர்வில் பணியாற்றி வந்தார். 

இந்தநிலையில்  அவரது பதவிக்காலம் இந்த மாதம் 22-ம் தேதி முடிவடையில் நிலையில் அவர் இன்றுடன்   ஓய்வு பெற உள்ளார்.  இருப்பினும் நீதிமன்றத்திற்கு 41 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அவர் இன்றே பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வரர் உட்பட 4 நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.  வழக்குகள் ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அவர்கள் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story