நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் எடியூரப்பா சொல்கிறார்


நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் எடியூரப்பா சொல்கிறார்
x
தினத்தந்தி 18 May 2018 7:09 AM GMT (Updated: 18 May 2018 7:09 AM GMT)

நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறி உள்ளார்.

பெங்களூர்

கர்நாடக சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இதனால் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நாளை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இது குறித்து கர்நாடக முதல்வர்  எடியூரப்பா கூறியதாவது:-

நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் என்று எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story