பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: அப்பாவி மக்கள் 4 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லையில் உள்ள நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்தநிலையில் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜம்மு-காஷ்மீரில் எந்தவித தாக்குதலும் நடத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், இன்று நடைபெற்ற தாக்குதலில் அப்பாவி மக்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story