பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் பயணம்: பிரிவினைவாத தலைவர்களுக்கு வீட்டுக்காவல்

பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ள நிலையில், காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். #PmModi
ஸ்ரீநகர்,
பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகருக்கு செல்கிறார். அங்கு இந்தியாவிலேயே மிக நீளமான சாலை வழி சுரங்கப்பாதைக்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த சுரங்கப்பாதையின் நீளம் 14 கி.மீ. ஆகும். ஷெர்–இ–காஷ்மீர் வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார். மோடி வருகையை முன்னிட்டு, ஜம்முவில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லால் சவுக் பகுதியில் திரள வேண்டும் தங்கள் ஆதரவாளர்களுக்கு பிரிவினைவாத தலைவர்கள் அழைப்பு விடுத்து இருந்தனர்.இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிர்வாய்ஸ் உமர் பரூக் மற்றும் சையது அலி ஷா கிலானி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். லால் சவுக் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story