‘பிக்னிக் ஸ்பாட்’ கிடையாது வருமான வரித்துறையை எச்சரித்த சுப்ரீம் கோர்ட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது


‘பிக்னிக் ஸ்பாட்’ கிடையாது வருமான வரித்துறையை எச்சரித்த சுப்ரீம் கோர்ட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது
x
தினத்தந்தி 2 Sept 2018 7:03 PM IST (Updated: 2 Sept 2018 7:03 PM IST)
t-max-icont-min-icon

தவறான தகவல்களை தெரிவித்தது தொடர்பாக வருமான வரித்துறையை கடிந்துக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. #SupremeCourt


புதுடெல்லி,

உத்தரபிரதேச நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் ஹபுர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் (எச்.பி.டி.ஏ.) என்ற அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வருமான வரிச்சட்டத்தில் விலக்கு கேட்டு தாக்கல் செய்ய மனுவை வருமான வரித்துறை கடந்த 2006–ம் ஆண்டு நிராகரித்தது. ண்டு நிறுவனத்தின் கீழ் வராது என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஹபுர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் வருமான வரித்துறை தீர்ப்பாயத்தை நாடி வருமான வரி விலக்கு பெற்றது.

இதை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த 2016–ம் ஆண்டு ஆகஸ்டு 29–ந்தேதி தள்ளுபடி செய்தது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. 

வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த போது, வருமான வரித்துறை சார்பில் ஆவணங்களையும், விளக்கங்களையும் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. மேலும், தாக்கல் செய்த ஆவணங்களிலும் தவறான விவரங்கள் கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து,  மேல்முறையீட்டுக்கு 596 நாட்கள் தாமதமானது ஏன்? என கோர்ட்டு விளக்கம் கேட்டது. இதற்கு போதுமான விளக்கம் வருமான வரித்துறை தரப்பில் அளிக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டு வருமான வரித்துறை மற்றும் மத்திய அரசின் வழக்கறிஞர்களை கடுமையாக சாடியது.
 
உங்களுக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் போதவில்லையா, அல்லது விளக்கம் கொடுக்க முடியவில்லையா? என்று கேள்வியை எழுப்பியது.  வருமான வரித்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, தயவு செய்து இப்படி செய்யாதீர்கள். சுப்ரீம் கோர்ட்டு ஒன்றும் ‘பிக்னிக் ஸ்பாட்’ கிடையாது. இந்திய சுப்ரீம் கோர்ட்டை நீங்கள் இப்படித்தான் நடத்துவீர்களா?’ என்று சரமாரியாக கேள்வியை எழுப்பியது.

 மனுதாரர்கள் (வருமான வரித்துறை) முற்றிலும் தவறான தகவல்களை கோர்ட்டுக்கு வழங்கி இருக்கின்றனர். வருமான வரித்துறை ஆணையர் வழியாக மத்திய அரசு இந்த பிரச்சினையை வெகு இயல்பாக எடுத்துக்கொண்டிருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது’ என்றும்  கூறியது. வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, தாமதத்துக்கான காரணம் குறித்து கோர்ட்டுக்கு தவறான தகவல்களை அளித்ததற்காக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து, தொகையை 4 வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டின் சட்ட சேவை குழுவிடம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.


Next Story