உத்தரபிரதேசத்தில் கன மழைக்கு 16 பேர் பலி


உத்தரபிரதேசத்தில் கன மழைக்கு 16 பேர் பலி
x
தினத்தந்தி 3 Sept 2018 6:00 AM IST (Updated: 3 Sept 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

லக்னோ, 

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர், சீதாப்பூர், அமேதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 500 வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.

ஷாஜகான்பூரில் மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அதே போல் சீதாப்பூர், அமேதி, அவுராயா, ரேபரேலி, உன்னாவோ ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 10 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மழையின் காரணமாக மேற்கூறிய மாவட்டங்களில் 8 கால்நடைகளும் இறந்தன.

Next Story