உ.பி.யில் சென்னையிலிருந்து சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆயுதம் தாங்கிய கும்பல் கொள்ளை, 12 பேர் காயம்


உ.பி.யில் சென்னையிலிருந்து சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆயுதம் தாங்கிய கும்பல் கொள்ளை, 12 பேர் காயம்
x
தினத்தந்தி 3 Sept 2018 4:25 PM IST (Updated: 3 Sept 2018 4:25 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் கங்கா-காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆயுதம் தாங்கிய கும்பல் பயணிகளிடம் கொள்ளையடித்துள்ளது.


லக்னோ,

சென்னையில் இருந்து பீகார் மாநிலம் சாப்ரா நோக்க் சென்ற கங்கா - காவேரி எக்ஸ்பிரஸின் எஸ் 6 மற்றும் 7 பெட்டிகளில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். மாணிக்பூர் ரெயில் நிலையத்தை கடந்ததும் ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 12-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இரண்டு பெட்டிக்குள் நுழைந்து அங்கு தூங்கிக்கொண்டு இருந்தவர்களின் பொருட்களை கொள்ளையடித்துள்ளது. அவர்களிடம் போராடியவர்கள் 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 4 பேரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் ரெயில்வே காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸ் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளது. மாநில உளவுத்துறையின் தகவல்களையும் நாடியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயிலில் பணியில் இருந்த ரெயில்வே போலீசார் கொள்ளையர்களை தடுப்பதில் தோல்வியடைந்துவிட்டனர் என அலகாபாத் போலீஸ் அதிகாரி எஸ்என் சபாத் கூறியுள்ளார். 

கங்கா - காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அலகாபாத் மற்றும் ஜான்சி மண்டல ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். அவர்கள் கொள்ளையர்களுடன் துப்பாக்கி சண்டை நடத்தியதாகவும், அவர்கள் தப்பிவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். 

Next Story