உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து விபத்து: 13 பேர் பலி
உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தின் ரிஷிகேஷ்- கன்கோத்ரி நெடுஞ்சாலையில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவில் உள்ள பத்வாரி என்ற இடம் அருகே 15 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த டெம்போ டிரவலர், 200 மீட்டர் ஆழத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டெம்போ டிரவலரில் பயணித்த 3 பெண்கள் உட்பட 15 பேரும் பலியாகினர்.
சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு மலைபோல் மணல்மேடுகள் குவிந்ததால், கட்டுப்பாட்டை இழந்த டெம்போ டிரவலர் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயத்துடன் தப்பிய இரு சிறுமிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story