"விமர்சிப்பது குற்றமானால் அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே" - கமல்ஹாசன்
"விமர்சிப்பது குற்றமானால் அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே" என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜன் முன்பு பா.ஜனதாவை எதிர்த்து முழக்கமிட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மாணவி சோபியாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
சோபியாவிற்கு பல்வேறு தரப்பில் ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சோபியாவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், “பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்படவேண்டிய குற்றவாளிகளே.
சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்,” என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story