தேசிய செய்திகள்

கைலாஷ் யாத்திரை: அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி + "||" + There is no hatred here: Rahul Gandhi shares his experience from Kailash Mansarovar yatra

கைலாஷ் யாத்திரை: அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி

கைலாஷ் யாத்திரை:  அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட  ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைலாஷ் யாத்திரையின் அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்துகொண்டார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் 26ம் தேதி கர்நாடக தேர்தல் பிரசாரத்திற்காக டெல்லியில் இருந்து கர்நாடகா சென்றார். அங்குள்ள ஹூப்ளி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அவர் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, பயங்கர சத்தத்துடன் அவர் சென்ற விமான இடது பக்கம் சாய்ந்தபடி சென்றது. விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கியதை அடுத்து ராகுல் நிம்மதி அடைந்தார்.

 இந்த சம்பவம் நடந்த 3 நாட்கள் கழித்து அவர் திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை செல்லப் போவதாக அறிவித்தார்.  எனவே அவர் விமான விபத்தில் இருந்து உயிர்தப்பியதற்கு பரிகாரமாக சென்றிருக்கலாம் எனவும் ஒரு தகவல் வெளியானது. 15 நாட்கள் வரை இந்த யாத்திரை நீடிக்கும் என தெரிகிறது.  கைலாஷ் யாத்திரை கடந்த ஆக. 31-ம் தேதி டெல்லியில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை புறப்பட்டு சென்றார். 

கைலாஷ் யாத்திரை குறித்து ராகுல்காந்தி அவ்வபோது டுவிட்டரில்  பகிர்ந்து வருகிறார். 

இந்தநிலையில்,  அவர் அழைத்தால் ஒருவன் கைலாஷ் யாத்திரை செல்கிறான்.  இந்த வாய்ப்பை பெற்றதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அழகான பயணத்தில் நான் காணும் இயற்கை காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். மானசரோவர் ஏரி மிகவும் மென்மையாக அழகாக அமைதியாக காணப்படுகிறது. இங்கு வெறுப்பதற்கு யாரும் இல்லை. இந்த நீர்நிலையை இந்தியாவில் இதைத்தான் நாம் வணங்குகிறோம் எனக்குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. வருமான வரி வழக்கு:சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது டிச.4 ஆம் தேதி விசாரணை
வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து சோனியா, ராகுல் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
2. மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவு : ராகுல் காந்தி, குமாரசாமி, மு.க ஸ்டாலின் இரங்கல்
மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
3. சத்தீஷ்கரில் உள்ள குருத்வாராவில் காங். தலைவர் ராகுல் காந்தி வழிபாடு
சத்தீஷ்கரில் உள்ள குருத்வாராவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார்.
4. ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி சத்தீஷ்காரில் ராகுல் காந்தி பிரசாரம்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
5. ராகுல் காந்தியுடன் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசுகிறார்.