கொல்கத்தா மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து


கொல்கத்தா மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 16 Sep 2018 2:50 AM GMT (Updated: 2018-09-16T08:20:47+05:30)

கொல்கத்தாவிலுள்ள பக்ரீ மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. #BagreeMarket

கொல்கத்தா,

கொல்கத்தாவிலுள்ள பக்ரீ மார்க்கெட் மிகவும் பிரபலமானது. மத்திய கொல்கத்தாவின் புர்ராபஜார் பகுதியில் அமைந்துள்ள பக்ரீ மார்க்கெட்டின் மொத்த வியாபார கடை ஒன்றில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

5 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள தீ யானது மள மளவென மற்ற இடங்களிலும் பரவியது. இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் உயிர்சேதம் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மூத்த போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

Next Story