எந்த தேர்தலிலும் எந்த மாநிலத்திலும் கூட்டணிக்கு தயாராக உள்ளோம் -மாயாவதி


எந்த தேர்தலிலும் எந்த மாநிலத்திலும் கூட்டணிக்கு தயாராக உள்ளோம் -மாயாவதி
x
தினத்தந்தி 16 Sep 2018 3:07 PM GMT (Updated: 2018-09-16T20:37:02+05:30)

எந்த தேர்தலிலும் எந்த மாநிலத்திலும் கூட்டணிக்கு தயாராக உள்ளோம் என்று மாயாவதி கூறியுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும்,  பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, இன்று லக்னோவில் புதிய வீட்டில் குடிபுகுந்துள்ளார்.

இதனையடுத்து அவர் செய்தியாளர்க்ளை சந்தித்தார். அப்போது கூறியதாவது:

எந்த தேர்தலிலும் எந்த மாநிலத்திலும் கூட்டணிக்கு தயாராக உள்ளோம். மரியாதையான அளவுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும்.  மரியாதையான அளவுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும்.  

ஒருவேளை மரியாதையான தொகுதிகள் வழங்காவிட்டால் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம்.  மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள பா.ஜ.க. அரசுகள் பிரித்தாளும் தந்திரத்தை கையாளுகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மாயாவதி இதுபோன்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story