கேரள வெள்ளத்திற்கு பிறகு சபரிமலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி


கேரள வெள்ளத்திற்கு பிறகு சபரிமலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 17 Sep 2018 2:45 AM GMT (Updated: 2018-09-17T08:15:25+05:30)

கேரள வெள்ளத்திற்கு பிறகு புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. #SabarimalaTemple

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த மாதம் பெய்த பலத்த மழை, அம்மாநிலத்தையே புரட்டி போட்டது. மாநிலமெங்கும் வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலையில் கடுமையான சேதம் ஏற்பட்டது. பம்பையில் பல பகுதிகள் வெள்ளத்தால் நிலை குலைந்தன. இதனால் கடந்த மாதம் சபரிமலையில் நடைபெற்ற ஓண பூஜை, ஆவணி மாத பூஜைகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் சபரிமலையின் அனைத்து பகுதிகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் சன்னிதானம் செல்ல தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளத்திற்கு பிறகு, புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நேற்று மாலை திறக்கப்பட்டது. மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து, குத்துவிளக்கு ஏற்றிவைத்து தீபாராதனை நடத்தினார். மேலும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. 

Next Story