ரூ.1.1 கோடி மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கிய 88 வயது விவசாயி


ரூ.1.1 கோடி மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கிய 88 வயது விவசாயி
x
தினத்தந்தி 17 Sep 2018 5:27 AM GMT (Updated: 2018-09-17T10:57:22+05:30)

புனேவை சேர்ந்த 88 வயது விவசாயி ஒருவர் 1.1 கோடி மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கியுள்ளார்.

புனே

மகாராஷ்டிர மாநிலம்  புனேவில் உள்ள தயானி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் போகலே. நீண்ட நாட்களாகவே விலை உயர்ந்த ஜாகுவார் காரை வாங்கவேண்டும் என்பது இவர் கனவு. தன்னுடைய 88-வது வயதில் தன் கனவை நிறைவேற்றியுள்ளார் போகலே. 1.1 கோடி மதிப்புள்ள ஜாகுவார் எக்ஸ் ஜே சலூன் காரை வாங்கியுள்ளார்.

இந்த விலை உயர்ந்த காரை வாங்கிய மகிழ்ச்சியை ஊரில் உள்ள அனைவருக்கும் தங்க முலாம் பூசப்பட்ட உறையில் வைக்கப்பட்ட இனிப்புகளை வழங்கிக் கொண்டாடியுள்ளார். இந்த இனிப்புகளை 1 கிலோவுக்கு 7000 ரூபாய்க்கு வாங்கியுள்ள அவர், இனிப்புகளுக்கு மட்டும் 21,000 ரூபாய் செலவழித்துள்ளார்.

போகலே வாங்கியுள்ள ஜாகுவார் சலூன் கார் 3.0-லிட்டர் டீசல் இன்ஜின் 270 பிஹெச்பி சக்தி கொண்டது. மெர்சிடீஸ் எஸ் கிளாஸ் பென்ஸ், பிஎம்டபுள்யூ 7-சீரீஸ் மற்றும் ஆடி ஏ8 கார்களை போல் இது ஃபுல் சைஸ் செடான் காராகும்.
Next Story