மேற்கு வங்கத்தில் பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் கார் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல்


மேற்கு வங்கத்தில் பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ்  கார் மீது  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல்
x
தினத்தந்தி 17 Sep 2018 10:12 AM GMT (Updated: 2018-09-17T15:42:26+05:30)

மேற்கு வங்கத்தில் பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் கார் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநில பாஜக மாநில தலைவராக திலிப் கோஷ் உள்ளார். இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் பொதுகூட்டத்திற்கு காரில் சென்று கொண்டிருக்கும் போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளார். அவர்கள் கற்களை கொண்டும், குச்சிகளை கொண்டும் தாக்குதல் நடத்தியதாக திலிப் கோஷ் கூறியுள்ளார்.  இந்த சம்பவத்தால் 5 பேர் காயமடைந்துள்ளனர். 

இது குறித்து திலிப் கோஷ் டுவிட்டரில் கூறுகையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எங்களை ஜனநாயக முறையில் தடுத்த நிறுத்த முடியவில்லை. குண்டர்களை வைத்தும், போலீசை  வைத்தும் எங்களை அச்சுறுத்துகிறது என குற்றம்சாட்டினார்.

Next Story