” பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்” 50 பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த கல்யாண மன்னன் கைது


” பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்”   50 பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த கல்யாண மன்னன் கைது
x
தினத்தந்தி 17 Sep 2018 3:20 PM GMT (Updated: 2018-09-17T20:50:12+05:30)

25 மாநிலங்களில் 50 பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த கல்யாண மன்னனை போலீசார் கைது செய்தனர்.

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் சந்த்கேடா நகரை சேர்ந்தவர் சித்தார்த் மெஹ்ரா (வயது 42) இவரது தந்தை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் சித்தார்த் என்பவர் மேட்ரிமோனி மூலம் ரூ.50,000 பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். 

அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன்படி, சித்தார்த் விபத்து ஒன்றில் தனது 2 கால்களையும் இழந்தவர் என்பது, இரண்டு கால்களிலும் இரும்பு ராடு பொருத்தப்பட்டுள்ளது.  நுனி நாக்கில் ஆங்கிலம் சரளமாக பேசுவபர் என்றும், பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர் என்பது தெரியவந்துள்ளது.

மேட்ரிமோனியில் தன்னை இணைத்துக்கொண்டு மற்ற அழகான ஆண்களின் போட்டோவை எடிட் செய்து அதில் தன்னுடைய முகத்தை வைத்து பதிந்துள்ளார். மேலும் தான் ஒரு ராணுவ அதிகாரி என்றும் போலியான தகவல்களை வழங்கி உள்ளார்.

இதனை பார்த்து மேட்ரிமோனி மூலம் பல பெண்களை கவர்ந்து தனதுக்கு ராணுவ சலுகை உள்ளது என்றும் 50,000 ஆயிரம் கொடுத்தால் சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் 25 மாநிலங்களில் 50 பெண்களை இப்படி ஏமாற்றி பண மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவருடைய செல்போன் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் மோசடி வழக்கின் கீழ் கைது செய்தனர்.

Next Story