புதுடெல்லி வந்தடைந்தார் ஆப்கானிஸ்தான் அதிபர்


புதுடெல்லி வந்தடைந்தார் ஆப்கானிஸ்தான் அதிபர்
x
தினத்தந்தி 19 Sep 2018 7:04 AM GMT (Updated: 2018-09-19T12:34:49+05:30)

ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி ஒரு நாள் பயணமாக இன்று புதுடெல்லி வந்தடைந்தார். #AshrafGhani

புதுடெல்லி,

ஒரு நாள் பயணமாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி இன்று காலை தலைநகர் புதுடெல்லி வந்தடைந்தார். இதனிடையே பிரதமர் மோடியை சந்திக்கும் அஸ்ரப் கானி, பரஸ்பர நலன்கள் கருதி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 

இந்த பேச்சுவார்த்தையில் அதிபர் அஸ்ரப் பிரதமர் மோடியுடன் இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கான இந்தியாவின் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க இருக்கிறார். மேலும் இரு தலைவர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்கான உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

Next Story