கேரள மாநில காங்கிரஸ் தலைவராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் நியமனம்


கேரள மாநில காங்கிரஸ் தலைவராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் நியமனம்
x
தினத்தந்தி 20 Sep 2018 3:23 AM GMT (Updated: 2018-09-20T08:53:50+05:30)

கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். #MullappallyRamachandran

புதுடெல்லி,

கேரள மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரம் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மாநிலத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சியை வலுப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. மாநிலத்தில் மிகவும் மோசமாக ஆட்சி புரிந்து வரும் இடது சாரி கட்சிகளுக்கு எதிராக போராடுவேன் எனக் கூறினார். இதனிடையே கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக கே.சுதாகரன், எம்.ஐ.ஷாநவாஸ் மற்றும் கோடிகுன்னில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story