தேசத்தின் தாயாக பசுவை அறிவிக்க உத்தரகாண்ட் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்


தேசத்தின் தாயாக பசுவை அறிவிக்க உத்தரகாண்ட் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 20 Sep 2018 5:14 AM GMT (Updated: 2018-09-20T10:44:36+05:30)

தேசத்தின் தாயாக பசுவை அறிவிக்க உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #MotherOfNation

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் தேசத்தின் தாயாக பசுவை அறிவிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு அமைப்புகள் ஆதரவு அளிக்க தீர்மானம் அனைவர் முன்னிலையிலும் ஒரு மனதான நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த தீர்மானம் மத்திய அரசிற்கு அனுப்பப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இத்தீர்மானம் குறித்து உத்தரகாண்ட் மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு அமைச்சர் ரேகா ஆர்யா கூறுகையில், விலங்குகளிலேயே பசுக்கள் மட்டும் தான் ஆக்ஸிஜன் வாயுவை சுவாசித்து, பின்னர் அதே வாயுவை வெளிவிடவும் செய்கின்றன. பசுவின் சிறுநீர் பல மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. அதே போல் பிறந்த குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தாய்ப்பாலுக்கு அடுத்து பசுவின் பாலே சிறந்தது என அறிவியில் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பயன்கள் அளிக்கும் பசு, தாய்மையின் ஒரு அவதாரமாக கருதப்படுகிறது. எனவே, தேசத்தின் தாயாக பசுவை அறிவிக்க சட்டசபையில் தீர்மானத்தை  நிறைவேற்றியுள்ளோம் எனக் கூறினார்.

Next Story