குட்டிகளை காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து பாம்புடன் போரிட்ட நாய் -வீடியோ


குட்டிகளை காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து பாம்புடன்  போரிட்ட நாய் -வீடியோ
x
தினத்தந்தி 20 Sep 2018 5:22 AM GMT (Updated: 2018-09-20T10:52:27+05:30)

தன் குட்டிகளை காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து பாம்புடன் சண்டைபோட்ட நாயின் பாசப்போராட்டம் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.


ஒடிசா மாநிலம் விஜய்பரிட்டா என்பவரின் வீட்டின் மாடிப்படிக்கு கீழே தனது 7 நாய் குட்டிகளை போட்டு பராமரித்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அங்கு நுழைந்த நாகப்பாம்பு குட்டிகளை சீண்டியுள்ளது. அதை பார்த்த தாய், பாம்புடன் சண்டைபோட்டு அதனை விரட்ட முயன்றது. நாயின் ஆக்ரோஷமான சத்தத்தை கேட்டு அங்கு ஓடிவந்த மக்கள், இந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளனர். இந்த சண்டையின் இறுதியில் தாய் நாய்க்கு வெற்றி கிடைத்தது. ஆனால் பாம்பு தீண்டியதில் இரு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தது. இருப்பினும் 5 குட்டிகளை போராடி தாய் மீட்டுள்ளது.
Next Story