எடியூரப்பாவுக்கு வயதிற்கு தகுந்த பக்குவம் வேண்டும் முதல்வர் குமாரசாமி தாக்கு


எடியூரப்பாவுக்கு  வயதிற்கு தகுந்த பக்குவம் வேண்டும் முதல்வர் குமாரசாமி தாக்கு
x
தினத்தந்தி 20 Sep 2018 10:01 AM GMT (Updated: 2018-09-20T16:58:09+05:30)

பி.எச்.எடியூரப்பா, "வார்த்தைகளை கவனமாக பேசவும் " மற்றும் "வயதிற்கு தகுந்த பக்குவம் வேண்டும் "அது தோல்வியடைந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கர்நாடக முதல்வர் எச்சரித்துள்ளார்.

பெங்களூர்

கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடியூரப்பா மற்றும் அவரது கட்சியினர் அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்கு கொண்டுவருவதால் , அந்த  தலைவர்களுக்கு எதிராக சில வெளிப்படையான தகவல்கள் வெளிவந்துவிடும். என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் பழி சொல்வதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும். 

எடியூரப்பா கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல் எறிகிறார். அவர் அதை மாற்றி கொள்ளவில்லை என்றால்  கடந்த காலத்தை போலவே, எடியூரப்பா கஷ்டத்தில் சிக்கி கொள்வார்.

பிஜேபி கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் நாங்கள் அறிந்துள்ளோம். பாரதீய ஜனதா அதன் முயற்சிகளில் வெற்றி பெறாது .

கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி இன்று பி.ஜே.பி மாநில தலைவர் பி எச். எடியூரப்பாவை, "வார்த்தைகளை கவனமாக பேசவும் " மற்றும் "வயதிற்கு தகுந்த பக்குவம் வேண்டும்  "அது  தோல்வியடைந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறினார்.

Next Story