போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கர்ப்பிணி காரில் குழந்தை பெற்றார்


போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கர்ப்பிணி காரில் குழந்தை பெற்றார்
x
தினத்தந்தி 20 Sep 2018 12:00 PM GMT (Updated: 2018-09-20T17:30:31+05:30)

உத்தர பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் காரிலேயே குழந்தை பெற்றுள்ளார்.

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதி அவினாஷ் மற்றும் சீமா.  இந்த நிலையில் கர்ப்பிணியான சீமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.  அவரை கார் ஒன்றில் அவினாஷ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலில் கார் சிக்கியது.  இதனால் காரிலேயே சீமாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.  இதனை அடுத்து சீமா மற்றும் குழந்தையை மாவட்ட சுகாதார மையத்துக்கு அவினாஷ் கொண்டு சென்றுள்ளார்.  அங்கு அவர்கள் நலமுடன் உள்ளனர்.


Next Story