பேராயருடன் கன்னியாஸ்திரியை இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் என்னிடம் உள்ளது - எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி


பேராயருடன் கன்னியாஸ்திரியை இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் என்னிடம் உள்ளது - எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 21 Sep 2018 1:06 PM GMT (Updated: 21 Sep 2018 1:06 PM GMT)

கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் சிக்கவைக்கப்பட்டுள்ளார் என எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார்.



கோட்டயம் குருவிளங்காட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் கன்னியாஸ்திரியை பேராயர் பிராங்கோ கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டுவரையிலான காலங்களில் பலமுறை பலாத்காரம் செய்தார் என்று புகார் தெரிவிக்கப்பட்டது. பேராயர் பெயர் இவ்வழக்கில் இழுக்கப்பட்டதும் பூஞ்சார் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் மோசமான கருத்துக்களை தெரிவித்தார். 

கன்னியாஸ்திரி பாலியல் தொழிலாளி என்பதில் ஏதும் சந்தேகம் உள்ளதா?  12 முறை பாதிரியார் பலாத்காரம் செய்தார் என்று கன்னியாஸ்திரி புகாரில் தெரிவித்துள்ளார், ஏன் முதல் முறை பலாத்காரம் செய்யப்பட்டவுடன் தெரிவிக்காமல் தாமதமாகக் கூறுகிறார் என்று விமர்சனம் செய்தார் பி.சி. ஜார்ஜ். மோசமான விமர்சனத்தை முன்வைத்த பிசி ஜார்ஜுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது. 

பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ், கோபத்தில் பேசியவார்த்தையாகும், பாலியல் தொழிலாளி என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்கப்போவது கிடையாது என்றார். “என்னை பொறுத்தவரையில் அவர் கன்னியாஸ்திரி கிடையாது. எந்தஒரு பெண்ணையும் பாலியல் தொழிலாளி என்பது தவறானது. இதுபோன்ற வார்த்தைகளை இனி பயன்படுத்த மாட்டேன். ஆனால் அந்த பெண் குறித்து நான் வெளியிட்ட கருத்துக்களில் நான் நிலையாக உள்ளேன்,” என்றார் பிசி ஜார்ஜ்.

இப்போது வழக்கை விசாரித்துவந்த போலீஸ் முன்னாள் பேராயர் பிராங்கோவை கைது செய்துள்ளது. 

எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி

இந்நிலையில் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய பிசி ஜார்ஜ், “சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்ட பின்னர் பேராயர் பிராங்கோவுடன், கன்னியாஸ்திரி இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. இவ்வழக்கில் பிராங்கோவை சிக்கவைக்க போலீஸ் முயற்சி செய்கிறது. இப்போது அவர் (கன்னியாஸ்திரிய) மகிழ்ச்சியாக காணப்படுகிறார். சட்டத்தால் தடைசெய்யப்பட்டதால், நான் இங்கே புகைப்படங்களைக் காட்டவில்லை. விசாரணை குழுவிடம் என்னுடைய ஆதாரங்களை தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால் விசாரணை அதிகாரிகள் பிராங்கோவை சிக்கவைக்கவே முயற்சி செய்கிறார்கள்.

 அவர்கள் புகைப்படக்காரரை அச்சுறுத்தியுள்ளார்கள், அவரிடம் இருந்து பாதிக்கப்பட்டவர் வருத்தமாக இருந்தார் என அறிக்கையை வாங்கியுள்ளார்கள்,” என குற்றம் சாட்டியுள்ளார். 

Next Story