இமாச்சலபிரதேசத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் 10 பேர் பலி


இமாச்சலபிரதேசத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் 10 பேர் பலி
x
தினத்தந்தி 22 Sep 2018 6:35 AM GMT (Updated: 2018-09-22T12:22:38+05:30)

இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லா அருகே வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 4 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். #ShimlaAccident

சிம்லா,

இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லா அருகே வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 4 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் குழந்தை உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் விபத்து குறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இந்த மோசமான விபத்து குறித்து சிம்லா காவல்துறை கண்காணிப்பாளர் ஓமாபதி ஜாம்வால் கூறுகையில், விபத்தானது குட்டுவிலிருந்து டியூனீ செல்லும் வழியில் ஸ்னைல் என்னுமிடத்தில் நடைபெற்றுள்ளது. விபத்தில் 4 பெண்கள் உட்பட 10 உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த குழந்தை உட்பட 3 பேர் ரோஹ்ரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் எனக் கூறினார். 

Next Story