காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே துப்பாக்கி சண்டை


காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே துப்பாக்கி சண்டை
x
தினத்தந்தி 23 Sep 2018 6:00 AM GMT (Updated: 2018-09-23T11:30:29+05:30)

ஜம்முவில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. #PulwamaEncounter

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. தெற்கு காஷ்மீரிலுள்ள தார் கானி குந்த் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து தார் கானி குந்த் கிராமத்தில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் திறம்பட செயல்பட்டனர். இந்நிலையில் துப்பாக்கி சண்டை குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. 

நேற்று முன் தினம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் 3 போலீசாரை கடத்திச்சென்று சுட்டுக்கொன்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story