"ஆயுஷ்மான் பாரத்” புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


ஆயுஷ்மான் பாரத்” புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 Sep 2018 9:36 AM GMT (Updated: 2018-09-23T15:27:50+05:30)

நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். #AyushmanBharat

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் காப்பீடு ஆவணங்களை பயனாளிகளுக்கு  பிரதமர் மோடி வழங்கினார். இந்த மருத்துவ திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்தினரின் 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவுகளை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். பிரதமர் மோடியின் கனவு திட்டமான அந்த திட்டத்துக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

 தமிழகத்தை பொறுத்தவரை இந்த திட்டத்தின் மூலம் 2 கோடியே 85 லட்சம் ஏழை மக்கள் பயன்பெறுவார்கள். அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.

திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

ஜார்கண்ட் மட்டுமல்ல நாட்டின் அனைத்து குடும்பங்களின் கனவுகளையும் நான் நிறைவேற்றி உள்ளேன். இன்று துவங்கப்பட்டுள்ள கனவுத்திட்டத்தின் மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டங்கள் கிடைத்துள்ளது. 

உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அனைத்து குடும்பங்களையும் உள்ளடக்கியதாக இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் இருக்கும்.  50 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த திட்டத்தால் பயன்பெறுவர். நாட்டின் ஏழைகளுக்காக சேவையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அடுத்த 6 மாதங்களில் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

 இதனிடையே இந்த திட்டத்தை இன்று துவக்கி வைக்கும் பிரதமர் மோடி, ஷாய்பஷா மற்றும் கோடெர்மா ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

மேலும் சிக்கிம் மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பாங்யாங் விமானநிலையத்தை பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார்.

Next Story